Poems by A. Nasbullah

0
384

 

Translated by : Sri N Srivatsa 

 

The Mountain Eaters

I cross a rivulet
and reach the valley
where you live.
You are eating
a mountain.
Realising that
the mountain
is not enough
to satiate your hunger,
God makes the mountain
grow again and again.
Your hunger does not
appear to diminish.
You drink the oceans
one by one.
You are still hungry.
Ultimately,
as your food is exhausted,
you ask for a little more
of the mountain and the sea.
Your time is up, says He.
You wish to devour
my mountains
and drink up my seas.
They had come
from within your earshot,
to escort your soul.
You go.
I shall follow.
My mountains and oceans
will be devoured
and drunk up
one day.
You go.
I too will go.
In the second space,
let us meet for the second time.
Maryam from Class Eight
will come behind us.


 

Forced Entry

On a blank paper
lying on the table,
I draw a deep sea.
On its lips I see
a river resting,
koels correcting
centuries of helplessness
by building nests
with the music of the rain
and, contrary to ancient rules,
crows getting ready
to lay eggs in koel nests.
A gale wind making
a forced entry
carries the painting
past me
into the mouth
of the rain
pouring for a week
and the rain
swallows the painting.
Disturbed,
my big dream
starts flying
in just a short while.


 

Original Tamil poems:

மலையைத் தின்று முடிப்பவர்கள்.

சிற்றாரொன்றை
கடந்து நீ வசிக்கும்
வெளியை வந்தடைகிறேன்
நீ மலையை தின்று கொண்டிருக்கிறாய்
உனது பசிக்கு
மலைபோதாதென்று
உணர்ந்த கடவுள்
மலையை மீண்டும் மீண்டும்
வளரச் செய்கிறான்
உனக்கோ
பசியடங்கியதாய்த் தெரியவில்லை
கடல்களை ஒவ்வொன்றாய் குடிக்கிறாய்
உனக்கு பசியடங்கவில்லை
கடைசியில்
உனது
உணவு முடிந்துவிட்டதாய்
நீ கடவுளிடம்
இன்னும் கொஞ்சம்
மலையும் கடலும் கேட்கிறாய்
அவன்
உனது நேரம்
முடிந்துவிட்டதாக சொல்கிறான்
உனக்கோ
எனது மலையை தின்னவும்
எனது கடல்களை
குடித்துவிடவும்
பெரும் ஆசை
உனக்கு கேட்கும் தூரத்திலிருந்து
அவர்கள் வந்திருந்தார்கள்
உன் ஆத்மாவை அழைத்துப் போக
நீ போ
பின்னால் நானும் வருகிறேன்
எனது மலையும்
கடல்களும் ஒருநாள்
தின்னப்பட்டும் குடிக்கப்பட்டும் விடும்
நீ போ
நானும் வருகிறேன்
இரண்டாம் வெளியில்
இரண்டாம் முறை சந்திப்போம்
எட்டாம் வகுப்பு
மர்யமும்
நமக்குப் பின்னால் வருவாள்.


 

அத்து மீறல்.

மேசையில் கிடந்த
வெற்றுத்தாளில்
ஆழ்கடலொன்றை வரைகின்றேன்
அதன் உதடுகளில்
நதியொன்று ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதையும்
மழையின் இசையில்
குயில்கள் கூடுகட்டி
நூற்றாண்டு இயலாமையை
சரி செய்து கொண்டிருப்பதையும்
ஆதியின் விதிமுறைக்கு மாற்றமாய்
குயில்களின் கூட்டில்
காகங்கள் முட்டையிட தயாராகுவதையும்
நான் காண்கிறேன்
பெரும் காற்றின்
அத்து மீறலொன்றில்
ஓவியம் 
என்னைக் கடந்து சென்று
ஒரு வாரகாலமாய் நீளுகிற
மழையின் வாயில் விழுந்துவிட
மழை ஓவியத்தை தின்றுவிடுகிறது
சற்று நேரத்தில் 
கலைந்து பறக்க துவங்குகிறது
என் மஹா கனவு.